பாரிஸ் ஒலிம்பிக் 2024

விவாதத்துக்கு அழைத்த ஒலிம்பிக் நாயகன் யூசுப் டிகேக்.. எலான் மஸ்க் கொடுத்த பதில் இதுதான்!

Published On 2024-08-05 07:49 GMT   |   Update On 2024-08-05 07:49 GMT
  • இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
  • . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது

துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.

இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News