தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு- கொளத்தூர் ரவி தலைமையில் நடந்தது
- தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு திரண்டு வந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
- மாநாடு தமிழக ஒட்டுமொத்த வணிகர்களின் திருப்பு முனை மாநாடாக அமைந்து உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5-வது மாநில மாநாடு, 40-வது வணிகர் தினவிழா மே 5-ந் தேதி "வணிக உரிமை மீட்பு மாநாடு" சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
மாநாட்டுக்கு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ்குமார் வரவேற்றார், சென்னை மண்டல தலைவர் செ.அருணாசல மூர்த்தி, மாநில இணை செயலாளர் சுவை டி.ராஜா, குழந்தைவேல், சிந்தா, அன்னை மாரியப்பன், வி.என் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் கவிதா ரவி, பிரேமா, சுமதி, லதா, ஐஸ்வர்யா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள்.
மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நீதியரசர் ப.ஜோதிமணி, ஆம்.ஆத்மி தலைவர் வசிகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பத்மநாபன், களஞ்சியம், முத்துபாண்டி, விளையாட்டு வீரர் சவுந்திர ராஜன், ஜாகீர் உஷேன், பள்ளி தாளாளர் புருஷோத் தமன், ஆர்.தமிழ்ச்செல்வன், முகமதுஅலி, ஈசன் முருக சாமி, மின்னல் ஸ்டீபன், தொழில் அதிபர்கள்
வி.பத்மராஜ், சாதிக்பாட்சா, ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.
மாவட்ட தலைவர்கள் ஆ.ஜெயராமன், பி.செந்தில் முருகன், செல்வநாயகம், நிர்வாகிகள் ஆர்.வளன், எம்.பி.ரமேஷ், லூர்துராஜ், பச்சைக்கனி, சீனிப்பாண்டி யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் கார், வேன், பஸ்களில் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி பேசியதாவது:-
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 40-வது வணிகர் தினத்தையொட்டி நடைபெறும் இந்த மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட என் அழைப்பை ஏற்று தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு திரண்டு வந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வணிக பெருமக்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் அன்னிய வணிகத்தால் சில்லரை வணிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. சில்லரை வணிகத்தை காக்க இங்கு வணிகர் அனைவரும் திரண்டு வந்துள்ளீர்கள். இந்த மாநாடு தமிழக ஒட்டுமொத்த வணிகர்களின் திருப்பு முனை மாநாடாக அமைந்து உள்ளது.
இவ்வாறு கொளத்தூர் த.ரவி பேசினார்.