தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை அன்று தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
- கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னை:
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொங்கல் அன்றும் அதற்கு மறுநாளும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும் நாளையும் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டெல்டா உள்பட மத்திய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். வருகிற 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு அறுவடை பணிகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.