என் மலர்
பைக்
ஹீரோவின் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக விவரம்
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய சந்தையில் விடா பிராண்டின் கீழ் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென இதன் அறிமுக தேதி மாற்றப்பட்டது.
சிப்செட் குறைபாடு காரணமாகவே ஸ்கூட்டர் வெளியீடு தாமதமானது. தற்போது இந்த ஸ்கூட்டரின் வெளியீடு அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அசத்தல் ஸ்டைலிங் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்வதற்கு மாற்றாக புது ஸ்கூட்டரை அனைவரும் வாங்கக்கூடிய விலை பிரிவில் அறிமுகம் செய்ய விடா பிராண்டு முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டதும் ஹீரோ விற்பனை மையங்களை வந்தடையும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்கூட்டர் தேர்வு செய்யப்பட்ட சில நகரங்களில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பஜாஜ் செட்டாக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.