என் மலர்
கார்
உற்பத்தியில் புது மைல்கல் கடந்த லம்போர்கினி கார்
- லம்போர்கினி நிறுவன கார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.
- புது மைல்கல் எட்டிய லம்போர்கினி கார் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச சந்தையில் உருஸ் மாடல் உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்கள் எனும் புது மைல்கல் எட்டி உள்ளதாக லம்போர்கினி அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் லம்போர்கினி நிறுவனம் தனது உருஸ் மாடல் உற்பத்தியில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்தது.இந்த நிலையில் 12 மாதங்களில் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற மைல்கல் எட்ட ஹரிகேன் மாடல் எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
லம்போர்கினி உருஸ் 20 ஆயிரமாவது யூனிட் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.