search icon
என் மலர்tooltip icon

    கார்

    குறைந்த விலை ஸ்கோடா குஷக் புது வேரியண்ட் அறிமுகம்
    X

    குறைந்த விலை ஸ்கோடா குஷக் புது வேரியண்ட் அறிமுகம்

    • ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் புது வேரியண்ட் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் சன்ரூப் மற்றும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஸ்கோடா குஷக் மாடலின் புது வேரியண்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR (non-sunroof -NSR) என்று அழைக்கப்படுகிறது. புது மாடல் ஸ்கோடா குஷக் ஸ்டைல் வேரியண்டை விட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும்.

    பெயருக்கு ஏற்றார் போல் புது வேரியண்டில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டைல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் ஸ்டைல் வேரியண்டை அப்டேட் செய்து 8 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கியது.


    ஸ்கோடா குஷக் ஸ்டைல் NSR மாடலில் டிஜிட்டல் டையல்கள் நீக்கப்பட்டு வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. குஷக் ஸ்டைல் NSR மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

    புதிய ஸ்கோடா குஷக் மாடல் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம் ஆகும். மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 11 லட்சத்து 29 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×