என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் ஜான் லான்டௌ உயிரிழப்பு
- ஜான் லான்டௌ உயிரிழப்பை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.
- இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.
உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார்.
இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, "ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்," என்றார்.
ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை துவங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.
இதைத் தொடர்ந்து இவர் டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.