search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது 20 ஓவர் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
    X

    தென் ஆப்பிரிக்க வீரர்  கிளாசென்

    2வது 20 ஓவர் போட்டி- 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

    • முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் 81 ரன்கள் குவித்தார்.

    கட்டாக்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன்னுடன் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிஷன் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஷ்ரேயஸ் 40 ரன்கள் அடித்தார்.

    கேப்டன் பண்ட் 5 ரன்களிலும், பாண்டியா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

    149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 35 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கிளாசன் 46 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். டேவிட் மில்லர் 20 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

    Next Story
    ×