search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மழையால் போட்டிகள் ரத்து: ஐசிசி-யை விளாசிய கவாஸ்கர்- வாகன்
    X

    மழையால் போட்டிகள் ரத்து: ஐசிசி-யை விளாசிய கவாஸ்கர்- வாகன்

    • மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

    மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணியான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றியிருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்திருக்காது. இருப்பினும் யாராலும் தடுக்க முடியாத மழை காரணமாக தொடர்ந்து அங்கே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கே மழையை சமாளிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.

    இந்நிலையில் தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐசிசி-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார்.

    அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.

    மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது.

    என்று கூறினார்.

    Next Story
    ×