search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு பந்துவீசிய ஆண்டர்சன் - வீடியோ
    X

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு பந்துவீசிய ஆண்டர்சன் - வீடியோ

    • ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மட்டும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆண்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். 22 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய அவர் மொத்தமாக 991 விக்கெட்டும், டெஸ்ட் போட்டியில் மட்டும் 188 போட்டிகள் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முதல் மற்றும் 2-வது இடங்கள் முறையே முரளிதரன் (800 விக்கெட்டுகள்), வார்னே (708) உள்ளனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆண்டர்சனுக்கு உலகம் முழுவதும் இருந்து முன்னாள் வீரர்கள் இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சக அணி வீரர்களுடன் ஆண்டர்சன் நேரம் செலவிட்டார். அப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மகளுக்கு ஆண்டர்சன் மிதமான வேகத்தில் பந்துவீசி விளையாடியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பென் ஸ்டோக்ஸ் எனது மகள் பேட்டிங் செய்ய எனது மகன் பீல்டிங் செய்ய ஆண்டர்சன் பந்துவீசினார் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

    Next Story
    ×