search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்: ஸ்மித் சொல்கிறார்
    X

    இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்: ஸ்மித் சொல்கிறார்

    • இங்கிலாந்து சமீபத்தில் 13 போட்டிகளில் 11-ல் வெற்றி கண்டுகள்ளது
    • பேட்ஸ்மேன்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே இங்கிலாந்து அணியின் நோக்கம்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் பாரம்பரியமான தொடர். இந்தத் தொடரை இழக்க இரு அணிகளும் விரும்பாது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும், மெக்கல்லம் பயிற்சிலும் இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' என்ற பயமறியாமல் அதிரடியாக விளையாடி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்கும் அணுமுறையை மேற்கொண்டுள்ளது.

    இதன்காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 13 டெஸ்ட் போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் இந்த அணுகுமுறையை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைபிடிக்குமா? என ரசிகர்கள் எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இங்கிலாந்தின் 'பாஸ்பால்' ஆட்டம் குறித்து ஸ்மித் கூறியதாவது:-

    இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எங்களது பந்துவீச்சுக்கு எதிராக எப்படி பாஸ்பால் கிரிக்கெட் விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எப்போதும் இதை நான் கூறி வருகிறேன். உண்மையிலேயே அதை பார்க்க ஆர்வமாக இருக்கும். கடந்த 12 மாதங்களாக தங்களது அணுகுமுறையை மாற்றி சிறப்பாக விளையாடும் இங்கிலாந்து ஆட்டத்தை பார்த்து ரசிப்பேன் என்பதை உறுதியாக கூறுவேன்.

    ஆனால், எங்களுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாட இருக்கிறார்கள் என்பதை பார்க்க காத்திருக்க வேண்டும்.

    ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹேசில்வுட் காயத்தால் ஓய்வில் உள்ளார். காயம் குணமடைந்தால் அணியில் இணைவார். இல்லையெனில் ஸ்காட் போலண்ட் அவருக்குப் பதிலாக களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் போலண்ட்தான் களம் இறங்கியுள்ளார்.

    Next Story
    ×