search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 156 ரன்கள் தேவை
    X

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 156 ரன்கள் தேவை

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 289 ரன்களில் டிக்ளேர் செய்தது.

    பிரிஸ்பேன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோஷ்வா டி சில்வா 79 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்கள் எடுக்கத் திணறியது. 55 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை உஸ்மான் கவாஜா - அலெக்ஸ் கேரி இணை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து பேட்டிங் செய்த இவர்களில் உஸ்மான் கவாஜா 75 ரன்களிலும், கேரி 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், கீமர் ரோச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    22 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 13 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 35 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மெக்கின்ஸ் 41 ரன்னும், அதனாஸ் 35 ரன்னும், கிரீவ்ஸ் 33 ரன்னும், ஹாட்ஜ் 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட், லயான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் ஆடி வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையிலும் இந்த டெஸ்டையும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×