search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19-ல் இருந்து 100-வது டெஸ்ட் போட்டி வரை: குழந்தைகளுடன் களமிறங்கிய சவுதி- வில்லியம்சன்
    X

    U19-ல் இருந்து 100-வது டெஸ்ட் போட்டி வரை: குழந்தைகளுடன் களமிறங்கிய சவுதி- வில்லியம்சன்

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
    • சவுதி- வில்லியம்சன் ஆகியோர் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.

    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர்களான டிம் சவுத்தி மற்றும் கனே வில்லியம்சன் ஆகியோர் தங்களது 100-வது டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

    இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு சவுதி மற்றும் வில்லியம்சன் மைதானத்திற்குள் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். மேலும் மைதானத்தில் அந்நாட்டு தேதிய கீதம் பாடும் போது அவர்களது குழந்தைகளுடன் நின்று மரியாதை செலுத்தினர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் இவர்கள் இருவரும் 2008-ம் ஆண்டு நடந்து U19 உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். அரையிறுதி வரை நியூசிலாந்து முன்னேறியது. அந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

    u19 உலகக் கோப்பைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நியூசிலாந்து சீனியர் அணியில் சவுதி அறிமுகமாகினார். இதில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் ஒரு ஆண்டுக்குள் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார்.

    ஆனால் வில்லியம்சன் டெஸ்ட் அணியில் இடம் பெற கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. அவர் 2010-ம் ஆண்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரது பேட்டிங் திறமையால் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சிறிது காலத்திலேயே அறிமுகமானார்.

    100 டெஸ்ட் போட்டிகளிலு விளையாடியுள்ள வில்லியம்சன் 8692 ரன்களை எடுத்துள்ளார், அவர் 32 சதங்களும் 33 அரை சதங்களும் அடித்துள்ளார். இவரை தவிர வேறு எந்த ஒரு நியூசிலாந்து வீரரும் இத்தனை சதங்களை கடந்ததில்லை. 100-வது டெஸ்ட்டில் விளையாடும் சவுதி, 378 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×