என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆசிய கோப்பை 2023 - 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்
- முதலில் ஆடிய வங்காளதேசம் 334 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் சதமடித்தனர்.
லாகூர்:
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், லாகூரில் நேற்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது. மெஹிதி ஹசன் 112 ரன்னும், நஜ்முல் ஹொசைன் 104 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது. இப்ராகிம் சட்ரன், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தனர். இப்ராகிம் சட்ரன் 75 ரன்னும், ஹஷ்மத்துல்லா ஷகிடி 51 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதியில், ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்காளதேச அணி 89 ரன்களில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது மெஹிதி ஹசனுக்கு வழங்கப்பட்டது.