என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தானுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
- வங்காளதேசம் அணியின் லிட்டன் தாஸ் 45 ரன்களை குவித்து அசத்தினார்.
- பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த மஹ்மதுல்லா நிதானமாக விளையாடி 56 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.