என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது - புவனேஸ்வர் குமார் புதிய சாதனை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது - புவனேஸ்வர் குமார் புதிய சாதனை](https://media.maalaimalar.com/h-upload/2022/06/21/1715974-buvi.gif)
X
புவனேஸ்வர் குமார்
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது - புவனேஸ்வர் குமார் புதிய சாதனை
By
மாலை மலர்21 Jun 2022 5:38 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது.
- சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்.
பெங்களூரு:
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
முன்னதாக, ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X