search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2 நாட்களுக்கு முன் நடந்ததை ஜீரணிக்க கடினமாக உள்ளது- மில்லர் உருக்கம்
    X

    2 நாட்களுக்கு முன் நடந்ததை ஜீரணிக்க கடினமாக உள்ளது- மில்லர் உருக்கம்

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது.
    • நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மோதின. இதில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கும் முயற்சியில் டேவிட் மில்லர் பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவின் அபாராமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அந்த கேட்ச் தான் இந்த போட்டியின் முடிவையும் மாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து டேவிட் மில்லர் மௌனம் கலைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த தோல்வி ரொம்ப வலிக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க கடினமாக உள்ளது. நான் எப்படி உணர்கிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்குத் தெரிந்த ஒன்று, இந்த யூனிட்டைப் பற்றி நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதுதான்.

    இந்த பயணம் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது, மாதம் முழுவதும் உயர்வும் தாழ்வும் இருந்தது. நாங்கள் வலியை சகித்துக் கொண்டோம். ஆனால் இந்த தோல்வி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து சிறப்பாக எங்களது விளையாட்டை கொடுப்போம்.

    என்று மில்லர் கூறினார்.

    Next Story
    ×