search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காதது ஏன்: டேவிட் வார்னர் விளக்கம்
    X

    அக்சர் படேலுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காதது ஏன்: டேவிட் வார்னர் விளக்கம்

    • பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது.
    • இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம்.

    16-வது ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதியது. இப்போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 162 ஆட்டங்களை சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில் அக்சர் படேல் ஏன் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து கேப்டன் டேவிட் வார்னர் விளக்கம் கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிட்ச்சில் ஸ்விங் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக பந்து ஸ்விங்கானது. ஆனால் பிட்ச்சின் இன்னொரு பக்கத்தில் ஸ்விங் அந்த அளவிற்கு ஆகவில்லை. ஒரு மைதானத்தின் சூழலுக்கு தகுந்தாற்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை குஜராத் அணி செய்து காட்டி இருக்கிறது.

    இதே மைதானத்தில் இன்னும் 6 போட்டிகளில் விளையாட உள்ளோம். சாய் சுதர்சன் தொடக்கம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். குறைந்தது டெல்லி மைதானத்தில் 180 முதல் 190 ஆட்டங்கள் வரை எடுக்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரில் நீண்ட ஆண்டுகளாக அக்சர் படேல் பந்து வீசி வருகிறார். இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளர். அவர் பந்து வீசாததற்கு பிட்ச் மற்றும் விக்கெட் தான் காரணம். மற்றபடி அவருக்கு காயம் எதுவும் இல்லை.

    என்று வார்னர் கூறினார்.

    இந்த போட்டியில் அக்சர் படேல் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை.

    Next Story
    ×