என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![புவனேஷ்வர் குமார் காலில் விழுந்த டேவிட் வார்னர்- வைரலாகும் வீடியோ புவனேஷ்வர் குமார் காலில் விழுந்த டேவிட் வார்னர்- வைரலாகும் வீடியோ](https://media.maalaimalar.com/h-upload/2023/04/26/1872200-devaid.webp)
புவனேஷ்வர் குமார் காலில் விழுந்த டேவிட் வார்னர்- வைரலாகும் வீடியோ
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டெல்லி- ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 34-வது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து தனது சொந்த மைதானத்தில் 7 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதற்கு முன்னதாக டெல்லியில் நடந்த போட்டியில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
This visual is all ? ?!
— IndianPremierLeague (@IPL) April 24, 2023
Follow the match ▶️ https://t.co/ia1GLIWu00#TATAIPL | #SRHvDC | @SunRisers | @DelhiCapitals | @BhuviOfficial | @davidwarner31 pic.twitter.com/t9nZ95dyJ7
இந்த நிலையில், இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாரின் காலில் விழுந்து அதன் பிறகு அவரை கட்டியணைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2016-ம் ஆண்டு வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.