search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    4வது போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
    X

    4வது போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.

    பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×