என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் ஆல் அவுட் - வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 158 ரன்னில் ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. வெற்றி பெற இன்னும் 33 ரன்களே தேவைப்படுவதால், இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.