என் மலர்
கிரிக்கெட் (Cricket)
வெளியேறியது ஆஸ்திரேலியா: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
- இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
- ரன்ரேட் முறையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.
England won by 4 wkts
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இன்றைய கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ரன்கள் குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாம் கரன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.
கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.