என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
- இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
- இந்தியா 2 போட்டிகளில் வென்று 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.
பர்மிங்காம்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 49 ரன் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், பிலிப் சால்ட், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, ரிச்சர்ட் கிலீசன், ரீஸ் டோப்லே.