search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கம்மின்ஸ்- லயன் அசத்தல்: 4-ம் நாள் உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து
    X

    கம்மின்ஸ்- லயன் அசத்தல்: 4-ம் நாள் உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் மற்றும் ப்ரூக் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
    • இங்கிலாந்து தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து நடக்கிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி 16-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    ஜாக் கிராலி 7 ரன்னுடனும், பென் டக்கெட் 19 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில் இன்று 4-ம் நாள் தொடங்கியது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் மற்றும் ப்ரூக் 46 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 4-ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸ் 22 ரன்னிலும் பேர்ஸ்டோ 4 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×