search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஆஸ்திரேலியா: இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிப்பு
    X

    டிராவிஸ் ஹெட்

    அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ஆஸ்திரேலியா: இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிப்பு

    • உலகக் கோப்பையில் தொடக்க சுற்றுடன் வெளியேறியது ஆஸ்திரேலியா
    • ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமனம்

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அரையிறுதிக்கான வாய்பை இழந்து, ஏமாற்றத்துடன் தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் சுற்றோடு வெளியேறியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். இருந்தாலும், அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது என்பதுபோல் அடுத்து வரும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா.

    இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட்டிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆரோன் பிஞ்ச் ஓய்வு கேட்டதால் இடம் பெறவில்லை. அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் சீன் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார்.

    கேமரூன் க்ரீன் இரண்டு தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து தொடருக்கான அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அஷ்டோன் அகர், ஆலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹசில்வுட், டிராவிட் ஹெட், மார்னஸ் லாபஸ்சேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா

    வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி:

    பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, அலேக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், நாதன் லயன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

    Next Story
    ×