search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கை: இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம்
    X

    கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கை: இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம்

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பெரில் என்ற புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் மையம் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளது.

    நிலைமை சரியானதும் இந்திய அணி தனி விமானம் மூலம் நாடு திரும்புவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே புறப்பட்டது சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×