search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஹர்ஷல் படேல், சஹல் அபாரம் - 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா
    X

    4 விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் படேல்

    ஹர்ஷல் படேல், சஹல் அபாரம் - 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா

    • இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.

    இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×