search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    4-வது டெஸ்ட் - பும்ரா இன்றி களமிறங்கும் இந்தியா
    X

    4-வது டெஸ்ட் - பும்ரா இன்றி களமிறங்கும் இந்தியா

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    Next Story
    ×