search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பத்துக்கு பத்து: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மகத்தான சாதனை
    X

    பத்துக்கு பத்து: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மகத்தான சாதனை

    • முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்திருந்த சாதனையை இந்தியா தற்போது சமன்செய்துள்ளது.

    Next Story
    ×