என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20: இந்தியா பந்து வீச்சு தேர்வு
Byமாலை மலர்11 Jan 2024 6:42 PM IST
- டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா முதன்முறையாக டி20-யில் களம் இறங்குகிறார்.
- சஞ்சு சாம்சன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் இன்று களம் இறங்கவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் நடக்கிறது. போட்டி 7 மணிக்கு தொடங்கும் நிலையில் தற்போது டாஸ் சுண்டப்பட்டது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெய்ஸ்வால் ஆகியோர் இன்று களம் இறங்கவில்லை.
இந்திய அணி விவரம்:
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில், 3. திலக் வர்மா, 4. ஷிவம் டுபே, 5. ஜிதேஷ் சர்மா (வி.கீப்பர்), 6. ரிங்கி சிங், 7. அக்சர் பட்டேல், 8. வாஷிங்டன் சுந்தர், 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங், 11. முகேஷ் குமார்.
Next Story
×
X