search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஷிவம் டுபே அரைசதம்: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா
    X

    ஷிவம் டுபே

    ஷிவம் டுபே அரைசதம்: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா

    • ரோகித் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார்.
    • ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி களம் இறங்கியது. ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரோகித் சர்மா ரன்அவுட் ஆனார். அவர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேற, அடுத்து திலக் வர்மா களம் இறங்கினார்.

    சுப்மன் கில் 12 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். திலக் வர்மா 22 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். ஷிபம் டுபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு டுபே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்தியாவுக்கு கடைசி 4 ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் டுபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். 17-வது ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது.

    18-வது ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கும், 3-வது பந்தை பவுண்டரிக்கும் ஷிவம் டுவே விரட்ட இந்தயிா 17.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டுபே 60 ரன்களுடனும், ரிங்கு சிங் 16 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×