search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் கிரிக்கெட்: இந்தியா வெற்றிபெற 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
    X

    மகளிர் கிரிக்கெட்: இந்தியா வெற்றிபெற 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இன்று நடைபெறும் 3-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்த நிலையில் லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×