என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
எதிர்பாராத ரன் அவுட்.. படியில் அமர்ந்து அழுத ராகுல் திரிபாதி - வைரல் வீடியோ
- ஐ.பி.எல். 2024 தொடரின் குவாலிஃபையர் சுற்று போட்டி நடைபெற்றது.
- ஐதராபாத் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து குவாலிஃபையர் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரசைர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐதராபாத் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் இந்த போட்டியிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.
The moment that changed the game for #SRH ?
— Star Sports (@StarSportsIndia) May 21, 2024
Will the skipper, #PatCummins get them to a fighting total?
? | @IPL
? | #KKRvSRH: LIVE NOW on Star Sports | #IPLOnStar | #PlayoffsOnStarpic.twitter.com/D4IehksWnd
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், ராகுல் திரிபாதி ரன் குவிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 13 ஓவரில் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட சமத் அதனை ஆஃப் சைடில் விளாசினார். சமத் விளாசிய பந்தை ஆண்ட்ரே ரசல் சிறப்பாக பிடித்துக் கொண்டார்.
இதனிடையே ரன் ஓடலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் சமத் ஒருபுறமும், திரிபாதி ஒருபுறமும் நின்றனர். பிறகு ராகுல் ஓட துவங்கியதாக நினைத்த சமத் மறுபுறம் கிரீசை கடந்துவிட்டார். இதைத் தொடர்ந்து ரன் ஓட துவங்கிய ராகுல் திரிபாதி நடுவில் தடுமாறி நிற்க, ரசல் துரிதமாக செயல்பட்டு பந்தை விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, ராகுல் திரிபாதி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
எதிர்பாராத ரன் அவுட் காரணமாக மனமுடைந்த ராகுல் முகம் முழுக்க கவலையுடன் களத்தை விட்டு வெளியேறினார். டிரெசிங் ரூம் செல்லும் வழியில், உணர்ச்சிகள் பொங்கிய நிலையில் ராகுல் திரிபாதி படிக்கட்டில் அமர்ந்து முகத்தை மறைத்தப்படி சில நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து இருந்தார்.
தொடரின் மிகமுக்கிய போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி, எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனதில் முகம் முழுக்க கவலையுடன் காணப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
He Sacrifices himself? #RahulTripathi #AbdulSamad #KKRvsSRH #IPL #ipl2024live pic.twitter.com/tIqNNJu1Kz
— Harshit Singh (@harshit_singh29) May 21, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்