என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடந்துங்கள்- இலங்கை விளையாட்டுதுறை அமைச்சர் கோரிக்கை இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடந்துங்கள்- இலங்கை விளையாட்டுதுறை அமைச்சர் கோரிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2024/01/11/2001331-ipl.webp)
X
இலங்கையில் சில ஐபிஎல் போட்டிகளை நடந்துங்கள்- இலங்கை விளையாட்டுதுறை அமைச்சர் கோரிக்கை
By
மாலை மலர்11 Jan 2024 6:04 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய் ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருடன் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது கேள்விகுறியாகும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இலங்கையில் சில போட்டிகளை நடத்துமாறு இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஜெய்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட், ஐபிஎல் 2024-ல் மீண்டும் களமிறங்குவார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர், வரவிருக்கும் சீசனில் அவரது அணியான டெல்லி கேபிடல்ஸை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X