என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஐபிஎல் போட்டிகள் எப்போது?: தேர்தல் தேதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ
- ஐபிஎல் போட்டி மார்ச் முதல் மே வரையில் நடத்தப்படுவது வழக்கம்.
- பாராளுமன்ற தேர்தல் இருப்பதால் போட்டிக்கான அட்டவணையை வெளியிட முடியாமல் இருக்கிறது பிசிசிஐ.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்தப் போட்டி மார்ச் முதல் மே மாதம் வரை நடத்தப்படுகிறது.
17-வது ஐ.பி.எல். டி20 போட்டிக்கான அட்டவணை இதுவரை அறிவிக்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) போட்டி அட்டவணையை அறிவிக்க முடியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி மார்ச் 22-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஐ.பி.எல். போட்டி அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் ஐ.பி.எல். அட்டவணை பற்றி விவாதித்தோம். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தகவலுக்காக காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஐ.பி.எல். போட்டி நடைபெறும் நேரத்தில்தான் தேர்தல் வருகிறது.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும். வேறு நாட்டுக்கு மாற்றுவது பற்றி எந்த யோசனையும் இல்லை. தேர்தல் தேதிக்காக காத்திருக்கிறோம். ஏனென்றால் அதன் அடிப்படை பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.