என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
3-வது ஓவரை மாற்றியது மாஸ்டர்ஸ்ட்ரோக்- கோலியின் கேப்டன்சியை புகழ்ந்த இந்திய முன்னாள் வீரர்
- விராட் கோலியின் முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது.
- விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.
ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் ஆடியதால் விராட் கோலி தான் இந்த போட்டியில் கேப்டன்சி செய்தார். இதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மிக அருமையாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி வேற லெவல் எனர்ஜியை அணிக்குள் கொண்டுவந்தார். எனர்ஜி மட்டுமல்லாது அவரது முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. 3-வது ஓவரிலேயே ஹசரங்காவை பந்துவீச வைத்தது மாஸ்டர்ஸ்ட்ரோக்.
மேத்யூ ஷார்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார் என்பதை தெரிந்தே ஹசரங்காவை அழைத்துவந்தார். அதன்படி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதே ஆர்சிபி அணி வலுவாகிவிட்டது. விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.
இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.