என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல்
    X

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகல்

    • நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
    • கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை.

    கவுகாத்தி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது.

    கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் உடற்தகுதி காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பும்ரா நீக்கப்பட்டாரா என்பதை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    Next Story
    ×