என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சச்சின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்
    X

    சச்சின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.

    ஐதராபாத்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். ஜோ ரூட் இதுவரை 2,555 ரன்கள் எடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 2,535 ரன்னும், சுனில் கவாஸ்கர் 2,483 ரன்னும் எடுத்துள்ளனர்.

    Next Story
    ×