search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Cricket World Cup 2023: கபில் தேவ் கடத்தப்பட்டது எதற்காக? வெளியானது உண்மையான காரணம்!
    X

    Cricket World Cup 2023: கபில் தேவ் கடத்தப்பட்டது எதற்காக? வெளியானது உண்மையான காரணம்!

    • கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோவில் புதிய விளக்கம்.
    • உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரம்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று (செப்டம்பர் 25) வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரல் ஆனதோடு, பரபரப்பையும் கிளப்பியது. வீடியோவில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கடத்தப்படுவதை போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    குழப்பத்திற்கு முடிவுக்கட்டும் வகையில், கவுதம் கம்பீர் இன்று பகிர்ந்து இருக்கும் வீடியோ அமைந்து உள்ளது. அதன்படி கவுதம் கம்பீர் நேற்று வெளியிட்ட வீடியோ ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விளம்பரம் என்று தெரியவந்துள்ளது.

    எவ்வித தகவலும் வழங்காமல், கவுதம் கம்பீர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது விளம்பரம் என்று தெரியவந்துள்ள நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இது வித்தியாசமான விளம்பரமாகவும் மாறி இருக்கிறது.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை தொடருக்காக நாடு முழுக்க போட்டிகளை நடத்த பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×