search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு செல்கிறோம் - விராட் கோலி உருக்கம்
    X

    விராட் கோலி

    எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலியாவை விட்டு செல்கிறோம் - விராட் கோலி உருக்கம்

    • இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
    • இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.

    முதலில் பேட் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 13-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

    டி 20 உலக கோப்பையை வெல்லும் அணியில் முதன்மையான அணியாக கருதப்பட்ட இந்தியா நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், எங்கள் கனவை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எங்களுடைய கனவை நிறைவேற்ற முடியாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது.

    ஆனால் ஓர் அணியாக நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம். இதிலிருந்து எங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்வோம். மைதானத்துக்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×