என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஷாருக் கான் அதிரடி அரை சதம்: மதுரை வெற்றிபெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
- டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன.
- டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் ஓரளவு விளையாடி 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
19-வது ஓவரில் கோவை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷாருக் கான் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 26 பந்தில் 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
மதுரை அணி சார்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டும், மிதுன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.