என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டாஸ் போடுவதில் மீண்டும் ஏமாற்று வேலை காட்டிய மும்பை- வைரலாகும் வீடியோ
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
- மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்டவில்லை.
மும்பை:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் மும்பை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில் டாஸ் போடுவதில் மீண்டும் மும்பை அணியால் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது.
அதனையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.
அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஹெட்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாசில் வென்றதாக அறிவித்தார்.
மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாசில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள்.
ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.