என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டக்அவுட்டில் முதலிடம் பிடித்த மேக்ஸ்வெல்
- இந்த தொடரில் ஆறு இன்னிங்சில் 3 முறை டக்அவுட்.
- ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.
சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.