search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காயம் காரணமாக சிஎஸ்கேவில் இருந்து விலகிய முகேஷ் சவுத்ரி
    X

    காயம் காரணமாக சிஎஸ்கேவில் இருந்து விலகிய முகேஷ் சவுத்ரி

    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    16-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (31-ந்தேதி)தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. கடந்த முறையை போலவே இந்த ஐ.பி.எல் தொடரிலும் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி விலகியுள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×