search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    100 போட்டிகளில் வெற்றி என்ற சாதனையுடன் விரும்பத்தகாத சாதனையும் படைத்த ரோகித் சர்மா
    X

    100 போட்டிகளில் வெற்றி என்ற சாதனையுடன் விரும்பத்தகாத சாதனையும் படைத்த ரோகித் சர்மா

    • சர்வதேச கிரிக்கெட்டில் 100-வது வெற்றியை பெற்ற முதல் வீரர்.
    • 14 மாதம் கழித்து களம் இறங்கிய ரோகித் சர்மா, டக்அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுமார் 14 மாதங்கள் கழித்து டி20-யில் களம் இறங்கிய ரோகித் சர்மா, ஆட்டத்தின் 2-வது பந்திலேயே ரன்அவுட் ஆனார்.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், டி20 சர்வதேச போட்டியில் 100 வெற்றிகளை ருசித்த முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டில் டக்அவுட்டில் ரன்அவுட் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளின் கேப்டன் பட்டியலிலும், முதல் இந்திய அணி கேப்டன் என்ற விரும்பத்தகாத சாதனையையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் இலங்கையில் ஜெயவர்தனே 2 முறையில், ஆப்கானிஸ்தானின் ஆஸ்கர் ஆப்கன், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பால் காலிங்வுட், ஜிம்பாப்வேயின் சிகும்புரா, பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி, நியூசிலாந்தின் வெட்டோரி ஆகியோரும் டக்அவுட் ஆகியுள்ளனர்.

    மேலும் டி20-யில் இதுவரை 6 முறை ரன்அவுட் ஆகி விராட் கோலி, தோனியுடன் அதிகமுறை ரன்அவுட்டாகிய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

    Next Story
    ×