search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காயத்தால் அறிமுக வாய்ப்பை தவறவிட்ட நிதிஷ் ரெட்டி: அந்த இடத்தைப் பிடித்த ஷிவம் துபே
    X

    காயத்தால் அறிமுக வாய்ப்பை தவறவிட்ட நிதிஷ் ரெட்டி: அந்த இடத்தைப் பிடித்த ஷிவம் துபே

    • ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.

    இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:-

    சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே.

    Next Story
    ×