search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஓகே.. ஆனால் சின்ன குறை இருக்கிறது- கவுதம் கம்பீர்
    X

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஓகே.. ஆனால் சின்ன குறை இருக்கிறது- கவுதம் கம்பீர்

    • இது ஓரளவு நல்ல அணியாகும்.
    • என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு லெக் ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.

    ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம். தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் பார்முக்கு நீங்கள் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு ஏதேனும் ஒரு லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம்.

    மேலும், அதே போல ஷிவம் துபே இருக்கும் பார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஷர்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×