search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தான் சிறந்த வேகப்பந்து வீச்சு அணி- கும்ப்ளே சொaல்கிறார்
    X

    உலகக்கோப்பையில் பாகிஸ்தான் தான் சிறந்த வேகப்பந்து வீச்சு அணி- கும்ப்ளே சொaல்கிறார்

    • பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள்.
    • அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள அணி பாகிஸ்தான் தான் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய அணி முன்னாள் கேப்டனுமான கும்ப்ளே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் உண்மையில் நல்ல வேகப்பந்து வீச்சை வைத்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போல் அவர்களிடம் ஆல்ரவுண்டர்கள் இல்லை. ஆஸ்திரேலிய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீரர்கள் உள்ளனர்.

    சுழற்பந்து வீச்சில் இந்திய அணி நல்ல நிலையில் இருக்கிறது. இதே போல வேகப்பந்து வீச்சு என்று என்னிடம் கேட்டால் பாகிஸ்தானை தான் சொல்வேன்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஜாகீர்கானின் பாதையில் சென்று இந்திய அணிக்கு பல அற்புதங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சினால் மிகவும் கவரப்பட்டேன். நான் அவருடன் 3 ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறேன். 20 ஓவர் போட்டிகளில் அவர் வளர்ந்து வந்த விதத்தை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். கடந்த ஐ.பி.எல். அவரது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம் இல்லாமல் வீசுவது என்பது கனவு தான். ஆனால் அதிலும் அர்ஷ்தீப்சிங் தேறி விட்டார். அவர் முதிர்ச்சி அடைந்து விட்டார். அவர் இது மாதிரியே முன்னேறி செல்ல வேண்டும். அதாவது ஜாகீர்கான் போல் இவரும் ஒரு பெரிய பவுலராக வரவேண்டும்.

    இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×