search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    போட்டியின்போது புகைப்பிடித்த இமாத் வாசிம்: பாகிஸ்தான் Smoking லீக் என விமர்சனம்
    X

    போட்டியின்போது புகைப்பிடித்த இமாத் வாசிம்: பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம்

    • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

    முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    முல்தான் சுல்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

    போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×