search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் போட்டிகளில் முதல் சதமடித்து அசத்தல் - ஆட்ட நாயகன் விருது வென்ற ரிஷப் பண்ட்
    X

    ரிஷப் பண்ட்

    ஒருநாள் போட்டிகளில் முதல் சதமடித்து அசத்தல் - ஆட்ட நாயகன் விருது வென்ற ரிஷப் பண்ட்

    • இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    மான்செஸ்டர்:

    இந்தியா, இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

    இதற்கிடையே, 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரின் ஓல்டுடிராப்ட் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடிய ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன், ஆட்ட நாயகன் விருதையும் ரிஷப் பண்ட் கைப்பற்றினார்.

    ஒருநாள் போட்டியின் தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியா கைப்பற்றினார்.

    Next Story
    ×